கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு அமைச்சக பயிற்சி மையத்தில் இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டது.