டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி தகுதிச்சுற்று போட்டிகள் இந்தியாவின் ஒடிசா மாநில தலைநகரான புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது.
இதில் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி ரஷ்ய அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய முதல் பாதி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி கோலடித்தது. அதன்பின் தனது அபார ஆட்டத்தின் மூலம் 24ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் மந்தீப் சிங் கோலடித்து அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் முதல் பகுதிநேர ஆட்டமுடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.