டாக்கா: ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தின் தலைநகர் டக்காவில் நடைபெற்று வந்தது. ஐந்து அணிகள் பங்கேற்கும் போட்டியின், முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தென் கொரியாவுடன் டிரா செய்தது. இதையடுத்து இந்தியா அணி வங்காளதேசம், பாகிஸ்தான், ஜப்பானை அணிகளை அடுத்தடுத்து வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை: இந்தியாவுக்கு வெண்கலம் உறுதி - இந்தியாவிற்கு ஹாக்கியில் வெண்கலம்
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை தோற்கடித்து வெண்கல பதக்கத்தை உறுதி செய்தது.
asian-champions-trophy
இருப்பினும் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணியிடம் தோல்வியை தழுவியதால், இறுதி போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இதையடுத்து இன்று இந்திய அணி மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இறுதியில், 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.
இதையும் படிங்க:ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை: அரையிறுதியில் இந்தியா தோல்வி