டாக்கா:ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தின் தலைநகர் டக்காவில் நடைபெற்று வருகிறது. ஐந்து அணிகள் பங்கேற்கும் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தென் கொரியாவுடன் டிரா செய்தது.
இதையடுத்து இந்தியா அணி வங்காளதேசம், பாகிஸ்தான், ஜப்பானை அணிகளை அடுத்தடுத்து வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் மோதியது.
முன்னதாக இந்தியாவிடம் ஜப்பான் தோல்வியை தழுவியதால், அந்த அணியினர் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் இந்திய அணியை 5-3 என்னும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
இறுதி போட்டியில் தென்கொரிய அணியுடன் ஜப்பான் மோத உள்ளது. தோல்விற்கு பிறகு, இந்திய அணி மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இரண்டு போட்டிகளும் நாளை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா