கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை உலகம் முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 27ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் பின்லாந்தில் நடைபெறவிருந்த மகளிர் ஹை பர்ஃபார்மன்ஸ் (High Performance) ஐஸ் ஹாக்கித் தொடரை ஒத்திவைப்பதாக சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஐஎச்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த மகளிர் ஹை பெர்ஃபார்மன்ஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இத்தொடரானது 2021ஆம் ஆண்டு கோடை காலத்தில், 40 நாடுகளிலிருந்து, 300 வீராங்கனைகளுடன் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றமானது இளம் வீராங்கனைகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும், 2022ஆம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீராங்கனைகள் தயாராக இது ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஓடுறது தான் என்னோட பலமே' - ஜடேஜா!