டோக்கியோ ஒலிம்பிக் 2020க்கு தகுதி பெற்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் வீரர், வீராங்கனைகள் முகாமிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஹாக்கி வீரர்கள் பயிற்சிக்காக மீண்டும் பெங்களூருக்கு திரும்பினர். அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கோல் கீப்பர் கிரிஷன் பகதூர் பதக் ஆகியோருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின், அவர்கள் குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்ச வாரம் மருத்துவமனையில் இருந்து பயிற்சி முகாமிற்கு திரும்பினர்.