ஹாக்கி ஜாம்பவான், இளம் வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரம், நானாஜி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் பல்பீர் சிங் (96). இவர், கடந்த 8ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மொகாலியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த சூழலில் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் அவர் காலமானார்.
இந்திய ஹாக்கியில் ஜாம்பவானாக வலம்வந்த பல்பீர் சிங், 1948 லண்டன் ஒலிம்பிக், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக், 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்ற மிக முக்கியக் காரணமாக இருந்தவர்.