1948 லண்டன் ஒலிம்பிக், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக், 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
இந்த வெற்றிகளுக்கு பல்பிர் சிங் மிக முக்கியக் காரணமாக இருந்தார். 1956ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரில் நெதர்லாந்து அணியை இந்திய அணி 6-1 என வீழ்த்தியது. அதில் 5 கோல்கள் அடித்து பல்பிர் சிங் சாதனைப் படைத்தார். இந்தச் சாதனை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
அதன்பின், இந்திய அணியின் பயிற்சியாளராக பல்பிர் சிங் செயல்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் 1971ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1975ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது. 95 வயதாகும் பல்பீர் சிங், தற்போது நிமோனியா பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
பல்பிர் சிங்கின் உடல்நிலை குறித்து அவரின் பேரன் கபீர் பேசுகையில், ''நிமோனியா பிரச்னை காரணமாக ஐசியூவில் எனது தாத்தா அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாள்களாக 104 டிகிரி வரை அவருக்கு காய்ச்சல் இருந்தது. வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தோம். ஆனால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாததால், நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வரும்'' என்றார்.
இதையும் படிங்க:ட்ரைவ் ஷாட் ஆடுவது எப்படி? இன்ஸ்டாவில் டிப்ஸ் வழங்கும் ஸ்டீவ் ஸ்மித்