இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிபடியாக உயர்ந்துவருகிறது. நேற்று ஒரே நாளில் 147 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியான நிலையில், இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தினக்கூலிகள், சிறு குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காகவும் உங்களால் முடிந்த நிதியை பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு செலுத்தலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியுதவி செய்துவருகின்றனர்.