2015ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கிஅணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரோலண்ட் ஓல்ட்மன்ஸ், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, ஹரேந்திர சிங் பயிற்சியாளராக இருந்தார். அவர் ஜூனியர் பயிற்சியாளராக பணி மாற்றப்பட்டதையடுத்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் நடைபெற்று வந்தது.
இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் க்ரஹம் ரைடு? - graham reid
டெல்லி : இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் க்ரஹம் ரைடு (54) தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் வேலைக்கு ஜே ஸ்டேசி, ப்ரண்ட் லிவர்மோர், க்ரஹம் ரைடு ஆகியோரின் பெயர்கள் பரீசிலனையில் இருந்ததையடுத்து, விளையாட்டுதுறை அமைச்சகம் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் க்ரஹம் ரைடு-ஐதேர்வு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் க்ரஹம் ரைடு ஆஸ்திரேலியாவின் ஜூனியர் பயிற்சியாளர் மற்றும் ஆம்ஸ்ரடாம் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.