இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருப்பவர் மன்பிரீத் சிங். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக மலேசியாவைச் சேர்ந்த இல்லி சித்திக் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக திருமணம் செய்துகொள்வதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் மன்பிரீத் சிங் - இல்லி சித்திக் இணை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தனது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் சீக்கிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். மேலும் மன்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் இல்லி சித்திக்கிற்கு ‘நவ்பிரீத் கவுர்' என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.