ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றுவருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஜெர்மனியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் எரிக் முதல் கோலை அடித்தார். பின்னர், ஜெர்மனி வீரர்கள் ஆரேன், முல்லர் முறையே 21, 24 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.
இதனால் 3-0 என்ற பின்னடைவைக் கண்ட இந்தியா தோல்வியை நோக்கி பயணத்தது. இந்நிலையில், ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் உத்தம் சிங் அணிக்கு முதல் கோலை அடித்தார். ஆனால் அடுத்த நில வினாடிகளில் ஜெர்மனி வீரர் கிரிஸ்டோபர் மற்றொரு கோல் அடிக்க அந்த அணி 4-1 என முன்னிலை பெற்றது.