1968ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்தத் தொடரில் இந்திய அணி பதக்கம் வெல்வதற்கு பல்பீர் சிங் குல்லார் முக்கியக் காரணமாக அமைந்தார்.
தற்போது 77 வயதாகும் பல்பீர் சிங் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்துவந்தார். பல்பீர் சிங் தனது மகனுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து வெள்ளிக்கிழமை ஜலந்தரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.