இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கியவர் சூரஜ் லதா தேவி. இவரது தலைமையின்கீழ் இந்திய அணி 2002இல் காமன்வெல்த் போட்டியிலும், 2003இல் ஆஃப்ரோ - ஆசிய போட்டிகளிலும், 2004இல் மகளிர் ஆசிய கோப்பை போட்டியிலும் என மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது.
இவரது ஆட்டத்தை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு 2003இல் அர்ஜூனா விருது வழங்கியது. இதையடுத்து, 2005இல் இவருக்கு ஷாந்தா சிங் என்பவருடன் திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
39 வயதான இவர் தனது கணவர் திருமணமான நாளிலிருந்தே வரதட்சனை கேட்டு, தன்னை மனரீதியாக சித்திரவதை செய்துவருவதாக்கூறி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அந்தப் புகாரில், திருமணமான நாளில் நான் வென்ற பதக்கங்களை அவரிடம் காண்பித்தேன். அதை பார்த்து இந்தப் பதக்கங்களால் என்ன பயன்? என என்னை கேலி செய்தார்.
மேலும் எனது நடத்தை குறித்தும் கேலி பேசினார் என தெரிவித்திருந்தார். இது குறித்து சூரஜ் லதா தேவி கூறுகையில், இந்த விவகாரத்தை நான் பொதுவெளியில் தெரிவிக்க நான் விரும்பவில்லை. ஆனால், பொருமைக்கும் ஓர் அளவு இருக்கிறது. அதை எனது கணவர் மீறியதால்தான் அவர்மீது புகார் தெரிவித்தேன்” என்றார்.
கணவரால் தாக்கப்பட்ட சூரஜ் லதா தேவி சூரஜ் லதா தேவியின் தலைமையின்கீழ் இந்திய அணி கோலோச்சியதை கதையாக்கி, 2007இல் மாபெரும் வெற்றி பெற்ற 'சக்தே' படம் எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க:உணவகத்தில் சண்டை... ஹாக்கி வீரர் சுட்டுக்கொலை!