இந்தாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை கருத்தில் கொண்டு, இந்திய அணி சர்வதேச சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, அந்நாட்டின் ஜூனியர் அணியுடன் விளையாடி வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியை, சோல் பாகெல்லா(Sol Pagella) ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா ஜூனியர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு சலீமா டெட் (Salima Tete) ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார்.