கடந்த 2018ஆம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளின் அரை இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி மலேசியாவிடம் வீழ்ந்ததையடுத்து, 2020 டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்பை இழந்தது.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா - இந்தியா ரஷ்யா
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நடைபெறும் எப்.ஐ.ஹெச் சீரிஸ் பைனல்ஸ்சில் (ஹாக்கி தொடர்) இந்திய அணி தனது முதல் போட்டியில் ரஷ்யாவை சந்திக்கிறது.
இதனால் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதி போட்டிகளில் விளையாட இந்திய அணி இத்தொடரின் இறுதி போட்டியை எட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உலக தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 22ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவை புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு சந்திக்கிறது. முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஹாக்கி போட்டியில் 25ஆவது இடத்தில் உள்ள அமேரிக்கா 16வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவை 2-0 என வீழ்த்தி அதிர்ச்சியளித்தது குறிப்பிடத்தக்கது.