2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஹெச் ஹாக்கி ப்ரோ லீக் தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், உலகின் தலைசிறந்த அணிகள் கலந்துகொள்ளும் தொடரை இந்திய நடத்துவது இந்திய அணிக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டனாகவும், ஹர்மன்ப்ரீத் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக நீண்ட நாள்களாக அணியிலிருந்து விலகியிருந்த சிங்கிள்சனா சிங், சுமித் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் கிரகம் ரெய்ட் பேசுகையில், ''இந்தத் தொடரில் இந்திய அணியுடன் வருண் குமாரும் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார். இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அனுபவம் வாய்ந்த வீரர்களையே தேர்வு செய்துள்ளோம். சுமித், சிங்கிள்சனா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவரும் உடல் தகுதியுடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குர்ஜந்த்தும் தீவிரப் பயிற்சியால் அணியில் இடத்தைப் பிடித்துள்ளார்.