2017 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவரான நரிந்தர் பத்ரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னதாக ஹாக்கி இந்தியா சங்கத்தின் தலைவராக பதவி வகித்தவர்.
தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருக்கும் நரேந்திர பத்ரா, பல விதிமீறல்கள் செய்து பதவியில் அமரந்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் சுதன்ஷூ மிட்டல் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் புகாரளித்தார்.
அந்தப் புகாரில், எஃப்ஐஹெச் விதியான 7.2ஐ மீறி பத்ரா பதவியில் உள்ளார். இதனால் அவரை ஹாக்கி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரை விசாரித்த சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திl ஒழுங்கு நடவடிக்கை அலுவலர், நரிந்தர் பத்ரா எவ்வத விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. அதனால் அவர் ஹாக்கி இந்தியா உடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என பத்ராவுக்கு ஆதரவாக பேசினார்.