இன்று (ஆக.05) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதக்க கனவை நனவாக்கியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம், ஜலேந்தரைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மந்தீப் சிங், தனது குடும்பத்தினருடனும் நமது ஈ டிவி பாரத்துடனும் அலைபேசி வழியாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கொண்டாடியுள்ளார்.