தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இபிஎல் 2020: கிரிஸ்டல் பேலஸை வீழ்த்தி வுல்ஃப்ஸ் அபார வெற்றி! - Crystal Palace

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வுல்ஃப்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.

Wolves share EPL lead after beating Crystal Palace 2-0
Wolves share EPL lead after beating Crystal Palace 2-0

By

Published : Oct 31, 2020, 4:40 PM IST

நடப்பு சீசனுக்கான இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வுல்ஃப்ஸ் அணி, கிரிஸ்டல் பேலஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 18ஆவது நிமிடத்தில், வுல்ஃப்ஸ் வீரர் ராயன் ஐட்-நௌரி கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் வுல்ஃப்ஸ் அணியின் டேனியல் கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தினார்.

இதனால் முதல் பாதி ஆட்டநேரமுடிவில் வுல்ஃப்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் வுல்ஃப்ஸ் அணி டிஃபென்ஸை வலிமைப்படுத்தி, எதிரணியை கோலடிக்கவிடாமல் தடுத்தது.

இதன்மூலம் ஆட்டநேர முடிவில் வுல்ஃப்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததோடு, இபிஎல் புள்ளிப்பட்டியலிலும் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க:வியன்னா ஓபன்: காலிறுதிச்சுற்றில் படுதோல்வியடைந்த ஜோகோவிச்!

ABOUT THE AUTHOR

...view details