கொச்சி (கேரளா): வரும் 2021-22ஆம் ஆண்டிற்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இத்தொடரில் விளையாடும் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக செர்பியா நாட்டைச் சேர்ந்த இவான் வுகோமனோவிக் இரண்டு நாள்களுக்கு முன்னால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவான் தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் வெளியிட்டுள்ள காணொலியில்," கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணிக்கு வெற்றி மனநிலை அளிப்பதுதான் என்னுடைய முதல் வேலை. ஒரு பயிற்சியாளராக கோப்பையை வெல்வதைதான் நான் விரும்புவேன்.
கோப்பையை வெல்வதுற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கமுடியாது என்றாலும், எங்களின் கடின உழைப்பிற்கும், சிறப்பான ஆட்டத்திற்கும் என்னால் உத்தரவாதம் அளிக்கமுடியும்.