சாம்பியன்ஸ் லீக் தொடரில் இண்டர் மிலன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி வெற்றிபெற்றது. அந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ராமோஸ், ரியல் மேட்ரிட் அணிக்காக 100ஆவது கோலை அடித்தார்.
இதுகுறித்து ரியல் மேட்ரிட் அணியின் மேனேஜர் சினடேன் சிடேன் கூறுகையில், ''அணி கிளப்பிற்காக 100 கோல்கள் அடித்திருப்பது சாதாரணம் தான். ஏனென்றால் அவர் மிகவும் திறமையான வீரர். இன்றைய நாளில் வெற்றிபெறுவது முக்கியமாக இருந்தது. சரியான நேரத்தில் அவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் எங்களின் கேப்டன், லீடர் எல்லாமே. அவரை எப்போதும் எங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எப்போதும் வெளியேற மாட்டார் என்பது தெரியும். நிச்சயம் வரலாற்றின் பல பக்கங்களை மாற்றி எழுதுவார்.