ஜெர்மனி நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வந்த பிறகு, அந்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடப்பு சீசனுக்கான பன்டேஸ்லிகா கால்பந்து தொடரை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (மே 27) நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்.பி.லீப்ஜிக் அணி ஹெர்தா அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியில் இரு அணி வீரர்களும் தங்களின் வெற்றிக்காக தொடக்கத்திலிருந்தே போராட தொடங்கினர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஹெர்தா அணியின் மார்கோ க்ரூஜிக் (Marko Grujic) ஆட்டத்தின் 9’ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் லீப்ஜிக் அணியின் லுகாஸ் 24’ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் சம நிலையை உருவாக்கினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணி வீரர்களும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை நீடித்தனர்.