2019-20 சீசனுக்கான கோபா இத்தாலி கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ரோமில் நேற்று (ஜூன் 17) நடைபெற்றது. பார்வையாளர்களின்றி நடைபெற்ற இப்போட்டியில் யுவென்டஸ் - நபோலி அணிகள் மோதின.
பெனால்டி முறையில் யுவென்டஸை வீழ்த்தி கோப்பை வென்ற நபோலி! - Juventus vs Napoli Coppa Italia
2019-20 சீசனுக்கான கோபா இத்தாலி தொடரின் இறுதிப் போட்டியில் நபோலி அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் யுவென்டஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
WATCH: Napoli beat Juventus on penalties to win Coppa Italia trophy
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதால் ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. இதில், முதல் இரண்டு ஷாட்களை கோலாக மாற்றத் தவறிய யுவென்டஸ் அணி அடுத்த இரண்டு ஷாட்களை கோலாக்கியது.
ஆனால் மறுமுனையில், நபோலி அணி முதல் நான்கு வாய்ப்புகளையும் கோலாக மாற்றியது. இதனால், பெனலாட்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற முறையில் நபோலி அணி யுவென்டஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வென்று அசத்தியது.