தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரிமியர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் வீழ்ந்த ஆஸ்டன் வில்லா! - ஆஸ்டன் வில்லா

ஆஸ்டன் வில்லா அணியை 2-1 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது.

Man United beat Villa Man United level points with Liverpool Liverpool Man United Premier League மான்செஸ்டர் யுனைடெட் ஆஸ்டன் வில்லா பிரிமியர் லீக்
Man United beat Villa Man United level points with Liverpool Liverpool Man United Premier League மான்செஸ்டர் யுனைடெட் ஆஸ்டன் வில்லா பிரிமியர் லீக்

By

Published : Jan 2, 2021, 12:23 PM IST

மான்செஸ்டர்: பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணத்தில் ஆஸ்டன் வில்லா அணியை வீழ்த்தியது.

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், வெள்ளிக்கிழமை (ஜன.1) ஆஸ்டன் வில்லா அணியை மான்செஸ்டர் யுனைடெட் எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புருனோ பெர்னாண்டஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது.

இந்நிலையில், பெர்னாண்டஸ் தனது ஒன்பதாவது ஸ்பாட்கிக்கை அடித்ததன் மூலம் வெற்றியை தனதாக்கினார். ஆஸ்டன் வில்லாவை 2-1 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியதன்மூலம், புள்ளிக்கணக்கில் லிவர்பூல் அணியுடன் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.

பிரிமியர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் வீழ்ந்த ஆஸ்டன் வில்லா!

இருப்பினும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூலுக்கு பின்னால் உள்ளது. மான்செஸ்டருக்கு எதிராக ஆட்டத்தில் வில்லா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. வில்லாவின் பாதுகாப்பை மீறுவது எளிதல்ல. எனினும் மான்செஸ்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: ரொனால்டினோ கைது முதல் மரடோனா மறைவு வரை! 2020 கால்பந்து செய்திகள்

ABOUT THE AUTHOR

...view details