2019-20ஆம் ஆண்டுக்கான பண்டல்ஸ்லீகா கால்பந்துத் தொடர், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணியை எதிர்த்து ஆக்ஸ்பெர்க் அணி விளையாடியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் ஆக்ஸ்பெர்க் அணியின் ப்ளோரியன் 34ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.
இதையடுத்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஆக்ஸ்பெர்க் அணி வீரர் மார்கோ இரண்டாவது கோலை அடிக்க, இதற்குப் பதிலடியாக ஜூலியன் 49ஆவது நிமிடத்தில் டார்ட்மண்ட் அணிக்காக முதல் கோலை அடித்தார். இதையடுத்து டார்ட்மண்ட் அணிக்காக களமிறங்கிய இளம் வீரர் எர்லிங் ஹாலண்ட் 59ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, அதனைத் தொடர்ந்த்து ஜேடன் டார்ட்மண்ட் அணிக்காக மூன்றாவது கோலை அடித்து சமநிலை ஏற்படுத்தினார்.
பின்னர் டார்ட்மண்ட் அணியில் எர்லிங் ஹாலண்ட் 70, 79 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் டார்ட்மண்ட் அணி 5-3 என முன்னிலைப் பெற்றது. இறுதியாக ஆட்ட நேர முடிவில் கோல்கள் எதுவும் விழாததால், டார்ட்மண்ட் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டார்ட்மண்ட் அணியில் எர்லிங் ஹாலண்ட் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.