இத்தாலியின் யுவென்டஸ் கால்பந்து கிளப் அணி மிகவும் பிரபலமானது. தலைசிறந்த வீரராகத் திகழும் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ அந்த அணிக்காகதான் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் யுவென்டஸ் அணி தனது முதல் போட்டியில் அத்லெடிகோ டி மாட்ரிட் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ளவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
#UCL:"என்னையாடா டார்ச்சர் பண்ண"-பந்து மிஸ் ஆனதால் பயிற்சியாளரை உதைத்த கால்பந்து வீரர்! - Player Kicked Coach in Football Video
கால்பந்து பயிற்சியில் சக வீரர்களிடமிருந்து பந்தை வாங்க முடியாமல் ஆத்திரமடைந்த யுவென்டஸ் வீரர் ஹிகுவைன், தனது அணியின் துணை பயிற்சியாளரை உதைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Higuain
இதற்காக, யுவென்டஸ் அணி வீரர்கள் இன்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் ஹிகுவேன் பந்தை சக வீரர்களிடமிருந்து வாங்கத் தவறினார். இதனால், ஆத்திரமைடந்த அவர் துணை பயிற்சியாளரை உதைத்தார். அதோடு மட்டுமில்லாமல், அருகே இருந்தே போர்டையும் விடாமல் எட்டி உதைத்தார்.
அதன்பின், யுவென்டஸ் அணியின் சக வீரர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இருப்பினும், அவர் துணைப் பயிற்சியாளரை தாக்கிய இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.