இத்தாலியின் பிரபல கால்பந்து தொடரான சீரி ஏ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (பிப்.28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி, வெரோனா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால், இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலேதுமின்றி சமனில் இருந்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது, ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 49ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.