ஜெர்மனி நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் வந்த பிறகு அந்நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு சீசனுக்கான பண்டஸ்லிகா கால்பந்து தொடரை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பேயர்ன் முனிச் அணி புரோஷியா டார்ட்மண்ட் அணியை எதிர்கொண்டது. புள்ளிகள் பட்டியலில் பேயர்ன் முனிச் அணி 61 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டார்ட்மண்ட் அணி 57 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.
இதனால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. பண்டஸ்லிகா தொடரில் தலைசிறந்த இரு அணிகள் மோதிய இப்போட்டி எப்போதும் போல பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது. இரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் முறையில் விளையாடின.