தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அறுவை சிகிச்சை காரணமாக 3 மாத ஓய்வை அறிவித்த கொடின்ஹோ! - Barcelona

லாலிகா கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தின்போது காயமடைந்த பார்சிலோனா மிட் ஃபீல்டர் பிலிப்பே கொடின்ஹோவுக்கு ஆர்த்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன் காரணமாக அவர் 3 மாதம் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Barcelona's Coutinho out for 3 months after knee surgery
Barcelona's Coutinho out for 3 months after knee surgery

By

Published : Jan 3, 2021, 4:42 PM IST

லாலிகா கால்பந்து தொடரில் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - ஈபார் எஃப்சி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற வீதம் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது பார்சிலோனா அணியின் நட்சத்திர மிட் ஃபீல்டர் பிலிப்பே கொடின்ஹோவின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர் களத்திலிருந்து வெளியேறிய கொடின்ஹோ, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், கொடின்ஹோ கால் மூட்டின் உள் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவருக்கு ஆர்த்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் காரணமாக பிலிப்பே கொடின்ஹோ, மூன்று மாதம் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியதையடுத்து, அவரும் ஓய்வெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்சிலோனா அணி வெளியிட்ட அறிக்கையில், "கொடின்ஹோவின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணாமாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் அவர் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: இபிஎல்: வெஸ்ட் போர்மை பந்தாடியது அர்செனல்!

ABOUT THE AUTHOR

...view details