தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஈஸ்ட் பெங்கால் அணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும்: ராய் கிருஷ்ணா

கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து ஏடிகே மோகன் பாகன் அணியை வெற்றிபெற வைத்த நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா, ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிரான டெர்பி போட்டியில் எப்படியாவது வென்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

want-to-win-against-sc-east-bengal-at-any-cost-roy-krishna
want-to-win-against-sc-east-bengal-at-any-cost-roy-krishna

By

Published : Nov 22, 2020, 6:40 AM IST

7ஆவது சீசனுக்கான ஐஎஸ்எல் தொடரின் முதல் போட்டியில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பாகன் அணி வீழ்த்தியது. அதில் ஏடிகே அணியின் முன்கள வீரர் ராய் கிருஷ்ணா கோல் அடித்து அசத்தினார்.

இதனிடையே வரும் 27ஆம் தேதி ஐஎஸ்எல் தொடரில் ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே மோகன் பாகன் அணி ஆடவுள்ளது. டெர்பி போட்டி என்பதால், உள்ளூர் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டி குறித்து ஏடிகே அணியின் ராய் கிருஷ்ணா பேசுகையில், '' டெர்பி போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று எங்கள் அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது எனக்கு நன்றாக தெரியும். அதனை நாங்கள் எப்பாடுபட்டாவது வென்றுவிடுவோம்.

கொல்கத்தா டெர்பி போட்டிகள் பற்றி அதிகமாக கேள்விப்பட்டுள்ளேன். அதில் பங்கேற்கும் வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை கிடைத்துள்ளது. டெர்பி போட்டியில் ஆடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கடந்தப் போட்டியில் நாங்கள் வெற்றிபெற்ற பின் வெளியே வந்தபோது, எங்களுடைய கார்கள் டிராஃபிக்கில் சிக்கின. அந்த அளவிற்கு ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் களத்தில் எங்களை பார்த்தால் எப்படி இருக்கும்.

ராய் கிருஷ்ணா

கேரள அணிக்கு எதிராக நாங்கள் நீண்ட ஆட்டங்களில் பின் வெற்றிப்பெற்றுள்ளோம். ஹாட்ரிக் அடிக்கவில்லை என்று விரக்தியாக உள்ளது. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்துவிட்டேன். அதனால் அடுத்தப் போட்டியில் இன்னும் கடினமாக ஆடுவோம்.

கடந்த இரண்டு மாதங்களை பெரும்பாலும் குவாரண்டைனில்தான் செலவிட்டுள்ளேன். வரும் ஞாயிறுக்கிழமை ஈஸ்ட் பெங்கால் அணியிடன் ஆடுவதற்கு முன்னதாக நிச்சயம் நீண்ட பயிற்சிகள் இருக்கும்.

கடந்த 8 மாதங்களாக யாரும் கால்பந்தை ஆடவில்லை என்ற நிலைதான் உள்ளது. அதனால் அனைத்து வீரர்களும் இந்த சூழலில் 90 நிமிடங்களும் களத்தில் இருப்பது கடினம்தான். அதனால் அனைவருக்கும் ஒரு கட்டத்தில் மாற்று வீரர்களை களமிறக்க வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:ஐஎஸ்எல் 2020-21: மும்பையை பந்தாடியது நார்த் ஈஸ்ட்!

ABOUT THE AUTHOR

...view details