கரோனா பாதுகாப்பு சூழலுடன் இந்தியன் சூப்பர் லிக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
தொடக்கத்திலேயே அசத்திய மும்பை
இதையடுத்து ஆட்டத்தின் தொடக்கம் முதலே மும்பை சிட்டி அணி தனது அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணியின் டிஃபென்ஸை திணறவைத்தது.
பின்னர் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியின் விக்னேஷ் தட்சிணாமூர்த்தி கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியிலும் திணறிய ஹைதராபாத்
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும், ஹைதராபாத் அணி கோலடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி அவர்களால் கோலடிக்க முடியவில்லை.
பின்னர், ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் ஆடம் கோலடித்து, அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தார். தொடர்ந்து போராடிய ஹைதராபாத் அணி, இறுதிவரை கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தி, அந்த அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதையும் படிங்க:ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித்தை நெருங்கிய கோலி, சறுக்கிய புஜாரா, ரஹானே!