ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 23 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து ஏஎஃப்சி கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 8 முதல் 26ஆம் தேதிவரை தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. தாய்லாந்து, ஈராக், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கத்தார், ஜப்பான், சவுதி அரபியா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிகிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.
இந்நிலையில், இந்தத் தொடரில் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் (32 போட்டிகள்) வீடியோ உதவி நடுவர் முறை (Video Assistant Refree) அறிமுகப்படுத்தபடும் என ஏஎஃப்சி கால்பந்து தலைவர் ஷேக் சால்மான் பின் இப்ராஹிம் அல் கலிஃபா தெரிவித்துள்ளார்.
கால்பந்து போட்டிகளில் ஆஃப் சைட், பெனால்டி உள்ளிட்டவை கண்காணிக்க இந்த வீடியோ உதவி நடுவர் முறை உதவுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏஎஃப்சி கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வீடியோ உதவி நடுவர் முறை காலிறுதிச் சுற்றிலிருந்துதான் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரபல கால்பந்து வீரரின் மூக்கை உடைத்த ரசிகர்கள்!