தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கரோனா வைரசால் இப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்துள்ளது.
எந்த அளவிற்கு ஹிட் என்றால், பிரீமியர் கால்பந்து தொடரின் ஸ்பர்ஸ் அணி பயிற்சியாளர் ஜோஷ் மவுரினோவுக்கு டேக் லைன்னாக பயன்படுத்தும் அளவிற்கு அந்தப் பாடல் பேமஸ் ஆகியுள்ளது. இது சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில், ஸ்பர்ஸ் அணி பயிற்சியை தொடங்கியுள்ளது. இவரது பயிற்சியின் கீழ், ஸ்பரஸ் அணி 2019ஆம் ஆண்டு பிரீமியர் லீக் தொடரில் ஆறாவது இடத்தில் முடித்தது. 57 வயதாகும் ஜோஷ் மவுரினோ, போர்டோ, செல்சீ, இண்டர் மிலன், ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் என நட்சத்திர அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இதனிடையே அடுத்த சீசனுக்கான பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் 5 மாற்று வீரர்களுடன் ஆடுவதற்கு மவுரினோ ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இங்கிலாந்து, ஸ்பெயினைத் தொடர்ந்து இத்தாலியிலும் ஆதிக்கம் செலுத்தும் ரொனால்டோ!