அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பின அமெரிக்கர் டெரீக் சவ்வின் என்ற காவலரால் சர்ச்சைக்குரிய விதத்தில் கொல்லப்பட்டார். உலகையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் போராட்ட இயக்கத்தை உருவெடுக்கச் செய்துள்ளது.
ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு எதிரான நிறவெறியை இனி அனுமதிக்கக் கூடாது, அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் அமெரிக்கா மட்டுமில்லாது உலகெங்கும் குரல்கள் எழுந்துவருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விளையாட்டு வீரர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவரும் நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி கால்பந்தாட்ட கிளப்பான லிவர்பூல் அணி, ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நெகிழ்ச்சிக்குரிய விதத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது. அந்த அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் மைதானத்தின் நடுவே ஒற்றைக் காலில் மண்டியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தப் புகைப்படத்தை அந்த அணியின் வீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னால்டு 'ஒற்றுமையே பலம்', 'கறுப்பர்கள் உயிருக்கு மதிப்பளியுங்கள்' என்ற வாசகங்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:கறுப்பாக இருப்பதால் நானும் இனவெறியால் காயப்பட்டுள்ளேன்- கிறிஸ் கெயில்