தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐரோப்பிய மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு! - அலெக்ஸாண்டர் செஃபெரின்

2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவிருந்த ஐரோப்பிய மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

UEFA move Women's European Championship in England to July 2022
UEFA move Women's European Championship in England to July 2022

By

Published : Apr 24, 2020, 12:54 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 27 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.90 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (UEFA ) நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம், காணொலி கூட்டம் மூலமாக நேற்று கூடியது. இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய கால்பந்துத் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்தின் முடிவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்துத் தொடர், ஐரோப்பிய மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக UEFA-வின் தலைவர் அலெக்ஸாண்டர் செஃபெரின் (Aleksander Ceferin) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அலெக்ஸாண்டர் கூறுகையில், ‘கோவிட்-19 பெருந்தொற்றால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள யூரோ 2020 கால்பந்துத் தொடரின், கால ஆட்டவணையில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக, மிக அவசர முடிவுகளை மேற்கொண்டுள்ளோம்.

அதன்படி 2021ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஐரோப்பிய மகளிர் கால்பந்துத் தொடர் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் ஆடவர் ஐரோப்பிய கால்பந்துத் தொடர் ஒத்திவைப்பு குறித்தான அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி: வீட்டில் உடற்பயிற்சியை மேற்கொண்ட நெய்மர்!

ABOUT THE AUTHOR

...view details