தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ஆறாவது முறையாக வென்ற லிவர்பூல்! - சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

ஸ்பெயின்: உலகின் மிக பிரபலமான கால்பந்து தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கோப்பையை டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி லிவர்பூல் அணி தட்டிச் சென்றது.

லிவர்பூல்

By

Published : Jun 2, 2019, 12:54 PM IST

2019ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் அணியை எதிர்த்து டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி விளையாடியது. இறுதி ஆட்டம் என்பதால் ரசிகர்கள் தொடங்கத்திலிருந்தே பரபரப்பாக இருந்த நிலையில், ஆட்டம் தொடங்கி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் ரசிகர்கள் பரபரப்பின் எல்லைக்கே சென்றனர்.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே லிவர்பூல் அணியின் சாலாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதனைப் பயன்படுத்திய சாலா ஆட்டத்தின் முதல் கோலை அடித்து லிவர்பூல் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.

சாலா

இதனையடுத்து இரு அணி வீரர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டனர். முதல் பாதி ஆட்டத்தின் நேரம் முடிவடைகிற நிலையில் டோட்டன்ஹம் அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் லிவர்பூல் அணியின் சாதுர்யமான தடுப்பாட்டத்தால் கோல் எதுவும் விழவில்லை. முதல் பாதி ஆட்ட நேரம் முடிவில் லிவர்பூல் அணி 1-0 என்ற முன்னிலையில் இருந்தது.

ஜேம்ஸ் மில்னர்

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் டோட்டன்ஹம் அணியின் வீரர்கள் ஆட்டத்தின் போக்கை தங்கள் கால்களிலேயே வைத்துக்கொண்டனர். பின்னர் லிவர்பூல் அணி டிவோக் ஆர்ஜி (divock origi) மாற்று வீரராக களமிறங்கினார்.

வெற்றியைக் கொண்டாடிய லிவர்பூல் அணி வீரர்கள்

டோட்டன்ஹம் அணியின் முயற்சிகள் எதுவும் லிவர்பூல் அணியிடம் பலனளிக்கவில்லை. பின்னர் ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டிவோக் ஆர்ஜி இரண்டாவது கோலை அடிக்க மைதானத்திலிருந்த லிவர்பூல் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் முடிவில் 2-0 என லிவர்பூல் அணி ஆறாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ABOUT THE AUTHOR

...view details