சென்னை: இந்திய கால்பந்து தொடர்களில் முக்கியமானது ஐ-லீக் கால்பந்து தொடர். இத்தொடரின், 15ஆவது சீசன் (2021-22) கரோனா தொற்று காரணமாக கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை 10 அணிகளுக்கு பதிலாக 12 அணிகள் தொடரில் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரை தலைமையிடமாக கொண்ட நேரோகா கால்பந்து கிளப் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்பநிதி தகுதி பெற்றுள்ளார். இவர் நடிகரும், சேப்பாக்கம் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.