தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யு-17 கால்பந்து முத்தரப்பு தொடர்: பைனலில் ஸ்வீடனிடம் வீழ்ந்த இந்தியா - U17 womens football

மும்பை: 17 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் கால்பந்து முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்வீடன் அணியிடம் இந்திய அணி தோல்வியைச் தழுவியது.

sweden football
sweden football

By

Published : Dec 20, 2019, 6:08 PM IST

இந்தியா, தாய்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் 17 வயதுக்குள்பட்ட மகளிர் கால்பந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடர் மும்பையில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - ஸ்வீடன் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே கோல் அடித்த ஸ்வீடன் அணி முன்னிலைப் பெற்றது. இதன்பின் இந்திய வீராங்கனைகளும் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கோல் அடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களின் முயற்சியை ஸ்வீடன் அணி தடுத்தது.

பின்னர் 16, 18 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்த ஸ்வீடன் அணி இருபது நிமிடங்களுக்குள் மூன்று கோல்கள் அடித்து இந்தியாவை மிரட்டியது. அதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 3-0 என்ற அபார முன்னிலையுடன் நிறைவுசெய்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்வீடன் அணியை இந்திய அணியால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. பின்னர் 70ஆவது நிமிடத்திலும் கோல் அடித்த ஸ்வீடன் அணி இறுதியில் 4-0 என்ற கணக்கல் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் முத்தரப்பு தொடரில் ஸ்வீடன் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதையும் படிங்க: 11 வயதில் பானிபூரி பாய்... 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் - தந்தை பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details