தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பயிற்சியாளர் மாறியவுடன் முதல் அவே போட்டியில் வெற்றிபெற்ற டோட்டன்ஹாம்! - Mauricio Pochettino

இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தியது.

tottenham

By

Published : Nov 24, 2019, 11:56 PM IST

இங்கிலாந்தில் நடப்பு சீசனுக்கான இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த சீசனில் 71 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்த டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி இந்த சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தது.

அந்த அணி விளையாடிய 12 போட்டிகளில் மூன்று வெற்றி, ஐந்து டிரா, நான்கு தோல்வி என 13 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தை பிடித்திருந்தது.

ஜோஸ் மவுரினோ

இதனால், அந்த அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து மொரிசியோ போச்செட்டினோவை அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கி அவருக்கு பதிலாக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் மவுரினோவை பயிற்சியாளராக நியமித்தது.

அவரது பயிற்சியின் கீழ் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் நேற்று வெஸ்ட் ஹாம் அணிக்கு எதிரான லீக் போட்டி மூலம் முதல் முறையாக களமிறங்கியது.

வெஸ்ட் ஹாம் அணியின் சொந்த மைதானமான லண்டனில் நடைபெற்ற இப்போட்டியின் டோட்டன்ஹாம் அணி அட்டாக்கிங் முறையை கையாண்டது.

டோட்டன்ஹாம்

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் டோட்டன்ஹாம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது.

இந்த சீசனில் அந்த அணி அவே போட்டிகளில் வெற்றிபெற்றும் முதல் போட்டி இதுவாகும். மவுரினோ பயிற்சியாளராக வந்தவுடன் டோட்டன்ஹாம் அணி வெற்றிபெற்றது அந்த அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோட்டன்ஹாம் அணி சார்பில் ஹியூங் சன் மின், ஹாரி கேன், லுகாஸ் மவுரா ஆகியோர் கோல் அடித்தனர்.இந்த வெற்றியின் மூலம், டோட்டன்ஹாம் அணி 13 போட்டிகளில் நான்கு வெற்றி, ஐந்து டிரா நான்கு தோல்வி என 17 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details