கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதில் இன்று (நவ. 30) நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் இத்ரிசா சில்லா கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஃப்சி கோவா அணியின் நட்சத்திர வீரர் இகோர் அங்குலா ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் இருந்தது.