நட்சத்திர ஸ்டிரைக்கரான இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிவரும் சுனில் சேத்ரி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் நேற்றுடன் (ஜூன் 9) தனது 15ஆவது வருடத்தை பூரத்திசெய்துள்ளார்.
'சுனில் எனது முதல் விருப்பம் அல்ல, அவர் மீது சந்தேகம் இருந்தது' - சுக்விந்தர் சிங் - தமிழ் விளையாட்டு செய்திகள்
சுனில் சேத்ரி தனது முதல் விருப்பம் அல்ல என்றும், சர்வதேச போட்டிகளில் அறிமுகமான போது அவர் குறித்த சந்தேகம் இருந்ததாகவும் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுனில் சேத்ரி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுக்விந்தர் சிங் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய சுக்விந்தர், "2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சுனில் சேத்ரி களம் இறக்குவது பற்றி நான் சிந்திக்க வில்லை. அவரை நான் எனது தேர்வாகவும் நினைக்கவில்லை. அவர் விளையாடுவது குறித்து எனக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அச்சமயம் களத்தில் மாற்று வீரராக யாரை களமிறக்குவது என்று நான் சரியான முடிவை எடுக்கவில்லை. அதன் காரணமாகவே சுனில் சேத்ரியை அப்போட்டியில் விளையாட அனுமதித்தேன்" என்றார்.
இந்திய அணிக்காக சுனில் சேத்ரி இதுவரை 115 போட்டிகளில் விளையாடி 72 கோல்களை அடித்துள்ளார். அதேபோல் தற்போதைய கால்பந்து வீரர்களில் ரொனால்டோவுக்கு அடுத்தப்படியாக சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.