2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 103ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா நேற்று ஆசிய சாம்பியனான கத்தாருடன் மோதியது. இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி உடல்நலக் குறைவு காரணமாக இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
இது தான் என்னோட இந்திய அணி - சுனில் சேத்ரி ட்விட் - ஆசிய கால்பந்து சாம்பியன்
ஆசிய கால்பந்துச் சாம்பியன் கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் டிரா செய்த இந்திய அணி குறித்து கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
![இது தான் என்னோட இந்திய அணி - சுனில் சேத்ரி ட்விட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4411880-thumbnail-3x2-goalkeeper.jpg)
கத்தாருடனான ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் ஆட்டம் ட்ராவில் முடிந்தது. மிக முக்கிய நம்பிக்கை நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கலந்து கொள்ளாமலே பலம் வாய்ந்த கத்தாரை கோல் அடிக்க விடாமல் ஆட்டத்தை ட்ரா செய்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து அபாரமாக கீப்பிங் செய்து எதிரணியின் பந்து கோல் போஸ்டுக்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார்.
இதுகுறித்து ஆட்டத்தில் பங்கேற்க முடியாத கேப்டன் சுனில் சேத்ரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ டியர் இந்தியா, இது தான் என்னுடைய அணி, இவர்கள் தான் என்னுடைய வீரர்கள். கத்தாருடன் ட்ராவான தருணத்தை எண்ணி நான் எவ்வளவு பெருமையடைகிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்பதை தாண்டி, வீரர்களின் போர்க்குணம் தான் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இந்த பெருமையெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர்களையேச் சாரும்” எனக் கூறியுள்ளார்.