தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பயோ பபுள் சூழல் அவ்வளவு எளிதானதல்ல - சுனில் ஷேத்ரி - சுனில் ஷேத்ரி

ஐஎஸ்எல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பயோ பபுள் சூழல் அவ்வளவு எளிதானது அல்ல என பெங்களூரு எஃப்.சி. அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி தெரிவித்துள்ளார்.

Sunil Chhetri gearing up for ISL in earnest, says staying in bubble "isn't easy"
Sunil Chhetri gearing up for ISL in earnest, says staying in bubble "isn't easy"

By

Published : Nov 12, 2020, 5:50 PM IST

Updated : Nov 12, 2020, 6:14 PM IST

2020-21ஆம் ஆண்டுக்கான ஐஎஸ்எல் சீசன் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கிளப் அணி வீரர்களும் பயோ பபுள் சூழலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதைப்பற்றி பெங்களூரு எஃப்.சி. அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி ட்விட்டரில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''மூன்றாவது வாரமாக பயோ பபுள் சூழலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். நிச்சயமாக இப்படி இருப்பது கடினம்தான். ஐஎஸ்எல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைவரும் பழைய உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு நாளும் இரண்டு பயிற்சி செஷன்களில் பங்கெடுத்துவருகிறோம்.

ஐஎஸ்எல் தொடங்குவதற்கு இன்னும் 8 நாள்களே உள்ளது. என்னைப் போலவே அனைவரும் அதற்காக ஆர்வமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இந்தச் சூழலுக்கு நடுவே என்னை நான் புத்துணர்வுடன் வைத்துக் கொள்வதற்காகச் சில புத்தகங்களைப் படித்துவருகிறேன். சமீபத்தில் Bill Bryson எழுதிய The Body என்ற புத்தகத்தைப் படித்துள்ளேன். அந்த அருமையான புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதேபோல் நானும் எனது மனைவியும் இணைந்து Sir David Attenborough எழுதிய A Life On Our Planet' புத்தகத்தையும் முடித்திருக்கிறோம். சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிக நேரத்தினை செலவிடுகிறோம். எனது ரசிகர்கள் அனைவரும் Sir David Attenborough-வின் வாழ்வை பற்றி அறிந்துகொள்ள ஒன்றரை மணி நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு!

Last Updated : Nov 12, 2020, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details