தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2020, 4:32 PM IST

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஈஸ்ட் பெங்கால்?

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Struggling East Bengal hope to get season going against NorthEast
Struggling East Bengal hope to get season going against NorthEast

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தளித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது. திலக் மைதான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஈஸ்ட் பெங்கால்

ஏற்கெனவே இத்தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி விளையாடிவுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நார்த் ஈஸ்ட் யுனைடெட்

அதேசமயம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி நடப்பு ஐஎஸ்எல் சீசனில் விளையாடி மூன்று போட்டியில் ஒரு வெற்றி, இரண்டு டிரா என புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சீசனில் தோல்வியைச் சந்திக்காமல் இருந்து வரும் நார்த் ஈஸ்ட் அணி, இன்றைய போட்டியிலும் அதனை தக்க வைக்கும் என ரசிககள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க:AUS vs IND:தொடரிலிருந்து விலகிய ஜடேஜா; மாற்று வீரராக ஷர்துல்!

ABOUT THE AUTHOR

...view details