ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து(Euro 2020) போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் நேற்று(ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குரேஷியா ஆணியை எதிர்கொண்டது.
வெற்றி கோல் அடித்த ரஹீம் ஸ்டெர்லிங்
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட எந்த முயற்சியும் எடுபடவில்லை. இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் வேகத்தை இங்கிலாந்து அணி தீவிரப்படுத்தியது.
இதன் பலனாக, 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் முன்கள வீரர் ரஹீன் ஸ்டெர்லிங் அணிக்கு முதல் கோலை தேடித்தந்தார். அந்த கோலே ஆட்டத்தின் வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்டத்தின் இறுதியில் 1-0 என்றக் கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.