தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாநில அளவிலான கால்பந்து போட்டி - சிவகங்கை மாவட்ட கண்டனூர் அணி சாம்பியன் - Tanjur

தஞ்சாவூர்: அதிராம்பட்டினத்தில் அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்ட கண்டனூர் கால்பந்து அணி, சாம்பியன் பட்டம் வென்றது.

மாநில அளவிலான கால்பந்து போட்டி-சிவகங்கை மாவட்டம் கண்டனூர் அணியினர் சாம்பியன்

By

Published : Jul 2, 2019, 3:47 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் சார்பில் கடந்த 12 தினங்களாக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கால்பந்து அணியினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில், சிவகங்கை மாவட்டம் கண்டனூர் அணியினரும், ராமநாதபுரம் மாவட்டம் காயல்பட்டினம் அணியினரும் மோதினர்.

மாநில அளவிலான கால்பந்து போட்டி-சிவகங்கை மாவட்டம் கண்டனூர் அணியினர் சாம்பியன்

இதில் நீண்ட நேரமாக இரு தரப்பினரும் கோல் அடிக்காத நிலையில், கடைசி நிமிடத்தில் கண்டனூர் அணியினர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு கோல் அடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு தமிழ்நாடு கால்பந்தாட்ட கழக மாநில துணைத்தலைவர் சிவானந்தம் மற்றும் பேச்சாளர் செய்யது அஹமது கபீர், ரெட் கிராஸ் சேர்மன் இத்ரீஸ் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details