ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் ஆரம்பத்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயின் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. எட்டாவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி வீரர் டெனிஸ் சாகாரியா அடித்த ஓன் கோல் மூலம் ஸ்பெயின் கோல் கணக்கை தொடங்கியது.
ஸ்பெயினை திணறடித்த சுவிட்சர்லாந்து
முதல் பாதியில் 1-0 என்று ஸ்பெயின் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியில் சுவிட்டர்லாந்து அணி தனது முதல் கோலைப் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது. சுவிட்சர்லாந்து அணி வீரர் ஷக்ரி அணிக்கு முதல் கோலைத் தேடித்தந்தார். பின்னர் இரு அணிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் அதை கோலாகா மாற்ற முடியவில்லை.