இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சௌத்தாம்டன் அணி - பிரைட்டன் அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில், ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ஃபெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பிரைட்டன் அணியின் பாஸ்கல், அதனை கோலாக மாற்றி அசத்தினார்.
இதையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத்தாம்டன் அணியின் ஜானீக் ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் கோலடித்து, போட்டியில் சமநிலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.