தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பார்வையாளர்கள் இருக்கையில் 'செக்ஸ் டால்ஸ்' - மன்னிப்புக் கோரிய தென் கொரிய கால்பந்து கிளப்!

தென் கொரியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கால்பந்து தொடரான கே-லீக் தொடரின் போது செக்ஸ் டால்களை பார்வையாளர் இருக்கையில் வைத்ததற்காக தென் கொரிய கால்பந்து கிளப்பான சியோல் எஃப்சி அணி மன்னிப்புக் கோரியுள்ளது.

South Korean football club apologises for filling stands with 'sex dolls'
South Korean football club apologises for filling stands with 'sex dolls'

By

Published : May 19, 2020, 8:25 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கால்பந்து உள்ளிட்ட ஒரு சில விளையாட்டு தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் கொரிய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படும் கே-லீக் கால்பந்து தொடர் பார்வையாளர்களின்றி, கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்தொடரின் நேற்றைய போட்டியின் போது, பிரபல கிளப் அணியான சியோல் எஃப்சி, பார்வையாளர்கள் இருக்கையில், "செக்ஸ் டால்" களை நிரப்பி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போட்டியை ஆன்லைன் வாயிலாக கண்ட ரசிகர்கள் சிலர் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து தென் கொரிய கால்பந்து கிளப் சியோல் எஃப்சி ரசிகர்களிடம் மன்னிப்புக்கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கே-லீக் தொடரின் போது, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் இருக்கையில், செக்ஸ் டால்களை கொண்டு நிரப்பியதோடு, ரசிகர்களின் மனதை புண்படுத்தியதற்காக கிளப் சார்பாக மன்னிப்புக் கோருகிறோம்.

பார்வையாளர்கள் இருக்கையில் ஓய்யாரமாக அமர்ந்திருக்கும் செக்ஸ் டால்ஸ்கள்..!

இச்செயலுக்கான முழுப்பொறுப்பையும் கிளப் ஏற்றுக் கொள்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், ரசிகர்களின் மனதை காயப்படுத்தியதற்காக மீண்டும் மன்னிப்பைத் தெரிவிக்கிறோம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, விளையாட்டு போட்டிகளில் பார்வையாளர்களுக்கான தடை நீடிக்கும் நிலையில் தென் கொரிய கால்பந்து தொடரில், பார்வையாளர்கள் இருக்கையில் செக்ஸ் டால்களை கொண்டு நிரப்பிய சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கேப்டன்சியில் இம்ரான் கான் ஸ்டைலை பின்தொடர்வேன்: பாபர் அஸாம்...!

ABOUT THE AUTHOR

...view details